நாமத்வார் குடும்ப அங்கத்தினர்களுக்கு ஒரு மடல்

நமது மதுரபுரி ஆஸ்ரமம் அமைந்து சற்றேறக்குறைய இருபத்தியாறு வருடங்கள் ஆகிவிட்டன. நாம் எப்பொழுதும் பகவானின் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தாலும், 10 நாட்கள் விமர்சையாக கொண்டாட ஆரம்பித்து இந்த வருடம் இருபத்தைந்தாவது வருடம்! வருடங்கள் என்பது முக்கியமில்லை. இருந்தாலும், எல்லோரும் நினைவுப்படுத்துவதால் நானும் நினைவுப்படுத்துகின்றேன், சந்தோஷம் தானே!

இந்த ஆஸ்ரமம் அமைந்துள்ள ஊர் எந்த விதத்திலும் நமக்கு ஏற்கனவே தொடர்புடையது அல்ல. தமிழ்நாட்டு பத்தமடையில் பிறந்த ஸ்வாமி சிவானந்த ஸரஸ்வதி அவர்கள் ரிஷிகேசத்தில் போய் அமர்ந்தார். அதுபோல், ஸ்வாமி அபேதானந்தா கேரளாவில் எங்கோ பிறந்தாலும், திருவனந்தபுரத்தில் அமர்ந்தார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மஹான்கள் பிறப்பது எங்கேயோ இருந்தாலும், அவர்கள் வந்து நிரந்தரமாக தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வேறு ஒரு இடமாகவே உள்ளது. அப்படித்தான் நம் குருநாதர் வந்து அமர்ந்த மதுரபுரி ஆஸ்ரமமும். இந்த ஊர் மாகாண்யம் என்று தான் அழைக்கப்படுகின்றது. மஹாரண்யம் என்பது மருவி நாளடைவில் மாகாண்யம் என்று ஆகிவிட்டது.

இன்று ஆஸ்ரமம் அமைந்துள்ள இடத்தின் கீழ் இன்றும் மஹரிஷிகள் தவம் செய்து வருகின்றார்கள். இருபத்தைந்து வருடங்களாக ஓயாமல் வேத நாதமும், நாம ஸங்கீர்த்தனமும், பாகவதமும், பிரவசனங்களும், பக்தர்களுக்கு பிரசாதம் அளிப்பதும் தொடர்ந்து எந்த குறையும் இல்லாமல் நடந்து வருகின்றது.

பிரேமிக வரதனுக்கும் பூஜைக்கு வேண்டிய சுத்தமான கிணற்று நீர், கறந்த பசும்பால், தூய்மையான மலர்கள் எல்லாம் கிடைக்கின்றது. வசந்த காலத்தில் வசந்த உத்ஸவம், நவராத்திரி உத்ஸவம், மார்கழி மாதத்தில் அத்யயன உத்ஸவம், கோகுலாஷ்டமி உத்ஸவம், ஹநுமத் ஜயந்தி, கன்னியாகுமரி ஜய ஹநுமாரின் பிரதிஷ்டாதினம் (சிவராத்திரி), கல்யாண ஸ்ரீநிவாஸ பெருமாளின் பிரதிஷ்டாதினமான வஸந்த பஞ்சமி, ஸ்ரீராம நவமி, மஹா பெரியவாளின் ஜயந்தி என்று வருடம் முழுவதும் உத்ஸவங்கள் நடந்து வருகின்றது.

முதல் உத்ஸவத்தில் நூறு பக்தர்கள் இருந்திருப்பார்கள். அப்பொழுது ஆஸ்ரமத்தில் எந்த வசதிகளும் கிடையாது. ஆனால், இன்று பகவான் தன் ஸாம்ராஜ்யத்தை எப்படி விஸ்தரித்துக் கொண்டுள்ளான். தூத்துகுடி, சிவகாசி, பெரியகுளம், விருதுநகர், காரியாபட்டி, மதுரை, திருத்தணி, வள்ளியூர், காங்கேயம், திருச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், கோவில்பட்டி, கோவிந்தபுரம், வத்தலகுண்டு, கடலூர், சிதம்பரம், கலெட்டிபேட், பம்மல், கோவூர், அண்ணா நகர், அரக்கோணம், அம்பாசமுத்திரம், சேங்கனூர், திருநெல்வேலி, மன்னார்குடி, சாத்தூர் ஆகிய இடங்களிலும் நாமத்வார்கள் இயங்கி வருகின்றன. தஞ்சாவூர், குடியாத்தம், உடுமலைபேட்டை போன்ற இடங்களில் ‘நாமத்வார்’ வேலைகள் நடந்து வருகின்றது. சைதன்ய குடீரம் கோவிந்தபுரம், நாங்கூர், சேங்கனூர், பிருந்தாவனம், டெல்லி குருகாவூன், ஹைதராபாத், வேதாரண்யம், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களிலும் நமது ஸ்தாபனங்கள் வெவ்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளது. இதையும் தவிர நிறைய கோயில் திருப்பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டுள்ளோம். மலேஷியா, சிங்கபூர், அமெரிக்காவின் பல இடங்களில், ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன் போன்ற இடங்களிலும் சொந்தமாகவே நாமத்வார் உள்ளது. அமெரிக்காவில் பெரிய அளவில் நிலம் வாங்கி SRI KRISHNA THEME PARK அமைக்க முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. கேரளா எர்ணாகுளத்தில் புதியதாக ‘நாமத்வார்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் BANGALOREல் நாமத்வார் இயங்கி வருகின்றது. சமீபத்தில் சித்ரதுர்காவில் ‘நாமத்வார்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில், ஸ்ரீ ஸ்வாமிஜி நம் எல்லோருக்கும் தெரிவிக்க விரும்பியதை கீழே பகிர்ந்துள்ளேன்.

“முன்பெல்லாம் ஏகாதஸிக்கு நூறு பக்தர்கள் வருவார்கள். இப்பொழுதெல்லாம் ஏகாதஸிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரேமிக வரதனை தரிசனம் செய்ய வருகின்றார்கள். சில ஏகாதஸியன்று மூவாயிரம், நாலாயிரம் பக்தர்கள் வருகின்றார்கள். வெளி மாநிலங்களில் இருந்தும் வருகின்றார்கள். நாம், ஏகாதஸிக்கு எல்லோரும் வாருங்கள் என்று விளம்பரப்படுத்துவதில்லை. ஆனாலும், எப்படியோ தெரிந்து கொண்டு வருகின்றார்கள், ஏன்? இந்த ஏகாதஸியன்று ஆஸ்ரமம் வந்து பகவானை ஸேவிப்பவர்களுக்கு ஏதோ நன்மைகள் ஏற்படுகின்றது. அதனால்தானே வருகின்றார்கள்! இந்த வருடம் முதல் எனக்கு ஒரு ஆசை. நம் ஆஸ்ரமத்தில் நடப்பது போலவே நாமத்வார்களில் கோகுலாஷ்டமி உத்ஸவம் விமர்சையாக நடைபெற வேண்டும். பல பக்தர்கள் அங்கங்கு கலந்து கொண்டு பகவானின் அருளைப் பெற வேண்டும் என்பதே. இந்த வருடம் அதற்கான ஏற்பாடுகளை நம் நாமத்வார் குடும்ப உறுப்பினர்கள் அங்கங்கு செய்து வருகின்றார்கள். நீங்கள் எல்லோரும் அவர்களுக்கு தோள் கொடுத்து அந்த வைபவத்தை விமர்சையாக செய்து பல புதிய பக்தர்களை பகவானின் அருட் கொடைக்குக் கீழே கொண்டு வாருங்கள். க்ருஷ்ணனைப் பற்றி எல்லோரிடமும் சொல்லுங்கள். நாமத்தை எல்லோரிடமும் கொண்டு சேருங்கள்.

நீங்கள் மதுரபுரியில் நடக்கும் உத்ஸவத்தில் கலந்து கொள்வதை விட அங்கு அங்கு நடக்கும் உத்ஸவத்தில் கலந்து கொண்டு அதை மேலும் சிறப்பாக ஆக்க வேண்டும். அதில்தான் நான் மகிழ்ச்சி அடைவேன். தமிழ்நாட்டில் உள்ள எல்லா நகரங்கள், கிராமங்கள், சிறிய ஊர்கள், பெரிய ஊர்கள், எல்லாவற்றிலும் ‘நாமத்வார்’ வரவேண்டும். ‘நாமத்வார்’ இல்லாத இடமே இருக்கக்கூடாது. அடுத்த கட்டமாக அதை நோக்கிப் பயணிப்போம்.

கண்ணன் பிறந்தநாளை எல்லா இடங்களிலும் கொண்டாடுவோம். எல்லோரையும் கொண்டாட செய்வோம். அன்று நாம் புத்தாடை அணிந்து கொள்வோம். வீட்டில் இனிப்பு செய்து பகவானுக்கு அர்ப்பணம் செய்வோம். நமக்கு தெரிந்த அன்பர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் கொடுத்து மகிழ்வோம். வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரிப்போம். வீட்டின் மேலே ‘HAPPY KRISHNA JAYANTHI’, ‘HAPPY BIRTHDAY TO KRISHNA’ என்ற வாசகங்களை வைப்போம். நாமத்வார் இல்லாத ஊர்களில் ஒரு பொது இடத்தில் ‘மஹாமந்திர கீர்த்தனம்’ மற்றும் பஜனைகள் செய்து கொண்டாடுவோம். எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்”.

-ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி

 

ஸ்ரீ ஸ்வாமிஜியின் ஆக்ஞைபடி நாம் எல்லோரும் Global Organisation for Divinityயின் சார்பில், GOD தலைமை அலுவலகத்தின் வழிநடத்திலின்படி கொண்டாடுவோம்.

-Dr ஆ பாக்யநாதன்

Leave a Comment

  • S.BASKAR August 26, 2018, 1:30 pm

    Very happy to read our GURUMAHARAJ’s message.Certainly we are committed to spread MAHAMANTHRA to the great extend possible. JaiGurunath.

  • கீதா.கே August 26, 2018, 1:57 pm

    ராதே ராதே குருநாதா
    ராதே ராதே குருநாதா
    ராதே ராதே குருநாதா
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண

  • A. Kalyanasundaram August 26, 2018, 1:57 pm

    let all devotees celebrate
    Krishna Jayanthi like Deepavali with kolattam and Namas with Bhagavathareading on Sri Krishna’s Avathara mahimai

  • A. Kalyanasundaram August 26, 2018, 2:05 pm

    Let us all singthe Glory of Sri Krishna’ reading Bhagavatham with nama wearing new dresses like Deepavali my humble namaskarams to GURUJI

  • கிருஷ்ணசைதன்யதாஸ் August 26, 2018, 3:35 pm

    RADHE RADHE JI

  • sridhar venkatachari August 27, 2018, 1:22 pm

    Radhe Radhe
    Pranams and Namaskaram to Sri Gurunathar’s lotus feet.

    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare!!
    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare!!

    Jai Sri Gurunath!

  • K.Sivaraman August 27, 2018, 11:33 pm

    Guruve Saranam

  • K.Sivaraman August 27, 2018, 11:36 pm

    What else I am competent to comment except to chant 24/7 ,
    Hare Rama Hare Rama
    Hare Krishna Hare Krishna
    Krishna Krishna Hare

  • Dineshkumar August 28, 2018, 3:40 am

    Radhe Radhe wish you happy gokulaastami and our guruji s message we take part of life to ensure good health and wealth to chant hare Rama hare Krishna by 24/7.jai gurudev

  • Kumari Shankar August 28, 2018, 4:51 am

    Radhe Radhe.Jai Gurunath ?

  • Praveenkumar CHUCHUTV August 28, 2018, 6:53 am

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண

  • A. LAKSHMI NARAYANAN August 29, 2018, 3:36 am

    I wish to join in my home town Thanjavur, if a Namadwaar is there. Otherwise I will join in Melaveethi Sri Navaneetha Krishnar Temple.
    Ram Ram.

  • Bhavani September 1, 2018, 5:03 am

    Radhe! Radhe!
    This message was very happy to creat a powerful energy.so all of them celebrate great fully in Janmashtami.
    Radhe! Radhe!
    Jai Gurunath!

  • venkatesh September 1, 2018, 11:47 am

    Happy to read swamji message.guruve saranam…

  • Krishnaveni September 2, 2018, 1:14 pm

    Pranams to Guruji. Radhe Radhe. Great Vision and Mission. We are there to support by the grade of Guruji.

  • Krishnaveni September 2, 2018, 1:15 pm

    Pranams to Guruji. Radhe Radhe. Great Vision and Mission. We are there to support by the Grace of Guruji.

  • S.Lakshmi Narayanan September 5, 2018, 1:22 pm

    எனது சொந்த ஊர் கும்பகோணம் அருகே உள்ளது மாந்தை என்னும் கிராமம் அங்கே நாமத்துவார் அமைக்க ஆசைப் படுகிறேன். நான் அம்பத்தூரில் சத்சங்கம் கடந்த 18 வருடங்களாக நடத்தி வருகிறேன். கிராமத்தில் இடம் உள்ளது அதை சத்சங்கமாக மாற்ற ( நாமத்துவார்) தங்களின் பூரண ஒத்துழைப்பு தேவை. அடியேன் முன்னின்று நடத்துவேன் என்பதை நமஸ்கார பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். மாந்தைS. லக்ஷ்மி நாராயணன் அம்பத்தூர் 9884083286.

  • Krish Ram September 8, 2018, 2:56 am

    Radhe Radhe, we are all blessed . RR

  • Krishna Murthy September 8, 2018, 12:16 pm

    Hare Rama Hare Rama. Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

Recent Posts

Sri Swamiji – August Event Updates

On August 6th morning, Sri Swamiji participated in the Pooja at Sri Chaitanya Kuteeram, Govindapuram. In the evening, He had darshan of Sri Bodhendral Adhistanam. At other times, He was in Solitude doing Japam and Dhyanam. On August 5th morning, Sri Swamiji did Tirumanjanam and Pooja to Sri Sadguru Paduka at Sri Premika Janmasthan, Senganoor Read more

Krishnapriye- Episode 2 (English version)

Krishnapriye! – Episode 2 – Maharanyam Sri Sri Muralidhara Swamiji The very word ‘Prema’ is exquisite, sweet. Oh how sweet is the chemistry it produces in our hearts even as we utter this word! But can it be described in words? Not at all. Shastras declare that Brahman is beyond the comprehension of the senses Read more