Premika Jagannatha Prasada Koodam
பகவந்நாம போதேந்திராள் ஸர்வ ஸாநித்யத்துடன் காவேரிக் கரையில் கோவிந்தபுரம் என்ற ஊரில் ஜீவசமாதியாகி அதிஷ்டானத்தில் இன்றும் வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். நம் குருநாதரின் உத்தரவுபடி கோவிந்தபுரத்தில் மஹாமந்திரம் அகண்ட கீர்த்தனம் நடைபெறுவதற்காக “சைதன்ய குடீரம்” என்ற பஜனாஸ்ரமம் அமைக்க பட்டது. அதில் ஶ்ரீஶ்ரீ அண்ணா தனது திருக் கரங்களால் பலராமர், பிரேமிக ஜகந்நாதர்,சுபத்ரா மற்றும் சைதன்ய மஹாபிரபு, நித்யானந்தரையும் 26/9/2007 அன்று பிரதிஷ்டை செய்தார். வருடா வருடம் ஜகந்நாதருடைய பிரதிஷ்டா தினமும், ஜகந்நாதருடைய ரதோத்ஸவமும் இரண்டு முக்கியமான உத்ஸவங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ரதோத்ஸவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பாடி வாத்யங்களுடன் மஹாமந்திர கீர்த்தனம் செய்துவர அதன் நடுவே நம் குருநாதர் ஶ்ரீஶ்ரீ அண்ணா பாவாவேசத்துடன் கீர்த்தனம் செய்து வருவது கண் கொள்ளா காட்சியாகும்.
பதரி தவம் செய்வதற்கான க்ஷேத்ரம். உத்ஸவம் தர்சனம் செய்ய ஶ்ரீரங்கம் க்ஷேத்ரம்.குழந்தைகளுக்கு அண்ணம் ஊட்ட குருவாயூர் க்ஷேத்ரம். நாம கீர்த்தனத்திற்கான க்ஷேத்ரம் பண்டரீ. அது போல் பூரி ஜகந்நாதர் அண்ண க்ஷேத்ரம். பூரி பிரஸாதமே பிரும்ம ஸ்வரூபம்.பூரி ஜகந்நாதருடைய பிரஸாதத்தை பூனையின் வாயில் இருந்தும் பிடுங்கி சாப்பிடலாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். சைதன்ய குடீரம் அமைந்து பதினோரு வருடங்கள் ஆன நிலையில் அவருக்கு என்று தனியாக, பாகவதர்கள் வந்தால் பிரஸாதம் போடுவதற்கு பிரேமிக ஜகந்நாத பிரஸாத கூடம் அமையாமல் இருந்தது. இந்த குறையை அறிந்து கோவிந்தபுரத்தை தனது அன்னையின் ஊராக கொண்ட திரு சீதாராமன் அவர்கள் ஒரு அழகான ‘பிரேமிக ஜகந்நாத பிரஸாத கூடம்’ தன் குடும்பத்தினார் உடன் அமைத்துக் கொடுத்துள்ளார். அவருடைய தாயின் நியாபகார்த்தமாக அதற்கு அவரின் தாயாரின் பெயர் நாமகிரி சங்கரநாராயணன் சூட்டப் பட்டுள்ளது. அவர் நல்ல தார்மீகர். எந்த வெளி பகட்டும் இன்றி அமைதியாக பல நல்ல காரியங்களை செய்து வருகின்றார். அந்த ஶ்ரீபிரேமிக ஜகந்நாத பிரஸாத கூடம் 24/9/2018 அன்று காலை ஶ்ரீஶ்ரீ அண்ணாவின் திருக்கரங்களால் பிரேமிக ஜகந்நாதரின் கைங்கர்யத்திற்கு ஸமர்பிக்கப்பட்டது.
– R. VENKATESAN